தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம்- Top 10 news @ 11AM - சசிகலா

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 11am
Top 10 news @ 11am

By

Published : May 11, 2021, 11:23 AM IST

டோக்கன் வழங்க சென்ற இடத்தில் முகக்கவசம் வழங்கிய எம்எல்ஏ!

கரூர்: பள்ளப்பட்டி நியாய விலைக் கடையில் கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, பல இடங்களில் மக்களை சந்தித்து முகக்கவசம் வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் கரோனாவால் உயிரிழப்பு!

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் சக்தி நாதன் கரோனா தொற்றால் உயிரிழந்தார்

கூடுகிறது பேரவை: புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(மே 11) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

சசிகலாவை தலைமை ஏற்க அழைத்து போஸ்டர்!

விருதுநகரில், அதிமுகவின் தலைமையை ஏற்று கட்சியை ஒருங்கிணைக்க சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் 45 ராக்கெட்களை ஏவிய ஹமாஸ்: இஸ்ரேலின் பதிலடியால் 20 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பயங்கர மோதலால், ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதினருக்கும் தடுப்பூசி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதினருக்கு அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வாகனங்களுக்கான கட்டணம் நிர்ணயம்!

புதுச்சேரி: ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வாகனங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை விட அதிக தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

லுக்கால் ரசிகர்களை பக்குனு ஆக்கிய ஐஸ்வர்யா மேனன்!

கேபிள் டிவி ஆப்ரேட்டர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கேபிள் டிவி ஆப்ரேட்டரைக் கொலை செய்த வழக்கில் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பதியில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது: 11 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா: திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பழுதடைந்ததால் 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details