தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - கரோனா நிவாரண நிதி

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM
11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

By

Published : Jun 10, 2020, 11:01 AM IST

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்: பிறந்தநாளில் உயிர் பிரிந்த சோகம்!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். பிறந்தநாளான இன்றே (ஜூன் 10) அவரது உயிர் பிரிந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ. அன்பழகன் மறைவு: மருத்துவமனை அறிக்கை கூறுவதென்ன?

சென்னை: மறைந்த ஜெ. அன்பழகன் உயிரிழப்பு குறித்து அவர் சிகிச்சைப் பெற்றுவந்த ரேலா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

'ஜெ. அன்பழகன் மறைவு வருத்தமளிக்கிறது' - முதலமைச்சர்

சென்னை: கரோனாவால் உயிரிழந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போல அன்பழகனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தரநிலையில் மதிப்பெண் சான்றிதழ் - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா நிவாரண நிதி: ரூ.1 கோடி வழங்கிய சொத்தாட்சியர்

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சொத்தாட்சியர் வழங்கினார்.

ஊரடங்கில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

டெல்லி : ஊரடங்கில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் அவலநிலை குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அர்ச்சகருக்கு கரோனா உறுதி

அமராவதி: ஸ்ரீகாளஹஸ்தி கோயில் அர்ச்சகருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

'அனிருத் முதல் படத்தை நான்தான் தயாரிப்பேன்' - சிவகார்த்திகேயன்

அனிருத் நாயகனாக நடித்தால் அவரது முதல் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

'கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்'- பரினீத்தி சோப்ரா

ஊரடங்கு நேரத்தில் வேறு வழியில்லாமல் வெளியே செல்பவர்கள் மற்றவர்களின் நிலையை அறிந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு நடிகை பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details