தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 11 news @11AM - 11am news

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11AM
11AM

By

Published : Jun 2, 2021, 11:17 AM IST

1.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? - முதலமைச்சர் ஆலோசனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 2) ஆலோசனை நடத்துகின்றனர்.

2.கருணாநிதியின் பிறந்தநாளிலாவது அர்ச்சகர் கனவு நிறைவேறாதா?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் அவரின் வாழ்நாள் விருப்பமான ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட வேண்டும் என அனைத்து சாதி அர்ச்சகர் சங்கம் கோரிக்கைவைத்துள்ளது.

3.ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு?

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4.எழுவர் விடுதலை: முதலமைச்சரிடம் விசிக தலைவர் கோரிக்கை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நெடுங்காலமாகச் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கைொவிடுத்துள்ளார்.

5.ஆவின் பால் விலைக்குறைப்பிற்குப் பின் 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை!

உலக பால் நாளை முன்னிட்டுச் சிறப்பாகச் செயல்பட்ட தொழிலாளர்களுக்குப் பரிசுப் பொருள்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் ஆவின் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

6.நாப்கின் தயாரிப்புப் பொருள்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நாப்கின் தயாரிப்புக்காக உபயோகப்படுத்தும் பொருள்களை பாக்கெட்டில் அச்சிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

7.கரோனா தடுப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனை வழங்க வேண்டும் - அமைச்சர் மூர்த்தி

கரோனா தடுப்பு பணிகளில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனை வழங்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

8.மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரவேண்டாம்!

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஜூன்.6 வரை பணிக்கு வருவதிலிருந்து முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

9.#HBD இசைஞானி இளையராஜா: “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்”

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் கொண்ட இன்னிசை தீரனான இசைஞானி இளையராஜா இன்று(ஜூன்.2) தனது 78வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

10.தமிழ்த் திரையுலகின் இரு இமயங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

இசை ஒரு மனிதனுக்குள் என்னவெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதைச் சத்தமில்லாமல் சாதித்துக்காட்டிய ‘இசைஞானி’ இளையராஜாவும், காட்சிகளால் உணர்வுகளைக் கடத்த முடியும் என்று உணர்த்திய இயக்குநர் மணிரத்னமும் இன்று தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details