தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 11 news @11AM - latest tamil news

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11AM
11AM

By

Published : Jun 1, 2021, 10:56 AM IST

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

2.முழு ஊரடங்கிற்கு முதலில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது எனவும்; விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3.'அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது' : சீமான் கொந்தளிப்பு

சென்னை: அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்குவதால்தான், தொழிலாளர்கள் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் இதனை தமிழ்நாடு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்க கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

4.கரோனாவிலிருந்து மீளும் இந்தியா.. தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் குறைவு..

இந்தியாவில் நீண்டு நாள்களுக்கு பின்னர், தினசரி கரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது

5.இந்திய கரோனாவுக்கு புதிய பெயர்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வகைகளுக்கு, உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களைச் சூட்டியுள்ளது.

6.இணைபிரியாத 47 வருட வாழ்க்கை - கரோனா பிரித்த துயரம்

இணைபிரியாமல் 47 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதியரை கரோனா பெரும்தொற்று பிரித்த கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7.கரோனா நோயாளிகளுக்கான உணவை ருசித்து பார்த்த தங்கம் தென்னரசு

விருதுநகர்: திருச்சுழி அரசு மருத்துவமனையில் கரோனோ நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

8.ஊரடங்கில் 1200 கி.மீ சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தந்தை உயிரிழப்பு

கடந்தாண்டு ஊரடங்கின் போது தனது தந்தையைச் சைக்கிளில் அமரவைத்து 1200 கி.மீ., பயணித்து அமெரிக்கா வரை புகழ்பெற்ற சிறுமி ஜோதியின் தந்தை, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

9.HBD மாதவன்: 'அலைபாயுதே' மாதவனுக்கு 51 வயசாயிடுச்சு...

கோலிவுட்டில் பெண்களின் மனங்களைக் கவர்ந்த நடிகர் மாதவன் இன்று (ஜூன்.01) தனது 51 வயது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

10.பெயரிலிருந்து சாதிப் பெயரை நீக்கிய ஜனனி - குவியும் பாராட்டுகள்

சென்னை: நடிகை ஜனனி தனது பெயரிலிருந்து சாதி அடையாளத்தை நீக்கியதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details