தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM - காலை 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM
காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM

By

Published : May 22, 2021, 11:34 AM IST

1. கரோனா தொற்று: மூன்றாவது நாளாக தமிழ்நாடு முதலிடம்!

நாடு முழுவதும் நேற்று (மே.21) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 299 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

3. சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: வீடுகள் தரைமட்டம், மூவர் உயிரிழப்பு!

பெய்ஜிங்: சீனாவின் யங்பியி நகரில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

4. காலமுறை ஊதியத்தில் பணி பாதுகாப்பு வழங்கவேண்டும் - மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

கரோனா தொற்று பணிக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

5. "ஜப்பானில் அவசர நிலை அமலில் இருந்தாலும், ஒலிம்பிக்கை நடத்துவோம்"

கரோனா பரவல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்திட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், போட்டியை நிச்சயம் நடத்துவோம் எனத் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

6. நவீன தானியங்கி ஆக்ஸிஜன் செறிவூட்டி: கொடையாக அளித்த மாணவி!

தனது பிறந்தநாளன்று பள்ளி மாணவி ஒருவர் நவீன தானியங்கி ஆக்ஸிஜன் செறிவூட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினார்.

7. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே உயிரிழந்தோருக்கான உண்மையான அஞ்சலி - டிடிவி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதே, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கான உண்மையான அஞ்சலி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

8. 2021க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி உறுதி - ஹர்ஷ் வர்தன்

இந்தாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

9. காற்று மாசு குறைவால் துல்லியமாகத் தெரியும் இமயமலை சிகரம்!

உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்து, காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது.

10. பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை!

சென்னை: ஊரடங்கு காலத்தை சாதகமாக பயன்படுத்தி பூட்டியிருந்த கடையில் கொள்ளையடித்த அடையாள தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details