தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 11 AM - காலை 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்..

காலை 11 மணி செய்திச் சுருக்கம்
காலை 11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 12, 2021, 11:02 AM IST

கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

சென்னை: கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சபாநாயகராக அப்பாவு இன்று பதவி ஏற்றார்

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்றார்.

இதுவரை தமிழ்நாடு சபாநாயகர் பதவியை அலங்கரித்தவர்கள் யார் யார்?

முதலாவது சட்டப்பேரவைக் காலத்தின் (1952-57) ஜே.சண்முகம் பிள்ளை தொடங்கி இந்தியா குடியரசானதன் பிறகு தமிழ்நாடு சபாநாயகர்களாக பதவி வகித்தவர்களின் பட்டியலைக் காணலாம்.

விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை நிர்வாகிகளின் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

பழத்தில் நாட்டு வெடிகுண்டு: மனித நேயமற்ற செயலால் உயிருக்கு போராடிவரும் எருமைமாடு

விருதுநகர்: ராஜபாளையத்தில் வேட்டையாட வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை உண்ட எருமைமாடு வெடி வெடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்: தீயணைப்பு வீரர் உள்பட மூவர் காயம்!

சென்னை: குரோம்பேட்டை அருகே குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மூன்று கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்: செயலிழக்கச் செய்த நிபுணர்கள்!

நாகப்பட்டினம்: செருதூர் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

2 முதல் 18 வயது உடையவர்களுக்கு 'கோவாக்சின்' சோதனைக்கு அனுமதி!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது உடையவர்களுக்கு செலுத்துவதற்கான 2 மற்றும் 3ஆம் கட்ட ஆய்விற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

பாலஸ்தீன் கிளர்ச்சிப் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

கில்லி விஜய்யின் நண்பர் உயிரைப் பறித்த கரோனா!

நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் துணை நடிகர் மாறன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details