தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM

By

Published : Jul 25, 2021, 1:31 PM IST

1. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு - முதல் தகவல் அறிக்கைப் பதிவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது.

2. ராமதாஸின் 82ஆவது பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸூக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3. தரமற்ற முகக்கவசங்கள் குறித்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட தரமற்ற முகக்கவசங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4. மகாராஷ்டிரா வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 59 பேர் மாயம்

மகாராஷ்டிராவில் தொடர் மழை, நிலச்சரிவு காரணமாக 82 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 59 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

5. Tokyo Olympics : தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார்.

6. டோக்கியோ ஒலிம்பிக்: தோல்வியைத் தழுவிய சானியா, ரெய்னா இணை

டோக்கியோ ஒலிம்பிக்கில், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் செட்டில் வெற்றி பெற்ற சானியா மிர்ஷா, அங்கிதா ரெய்னா இணை அடுத்த இரண்டு செட்டில் தோல்வியைத் தழுவினர்.

7. பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?

மாமல்லபுரம் அருகே பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

8. ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை வழக்கு ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தியதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. Maharashtra Flood: மகாராஷ்டிரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலாய்லாமா பிரார்த்தனை

மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலாய் லாமா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

10. தமிழ்நாட்டில் முதல்முறை: குன்னூரில் சிறிய இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி

தமிழ்நாட்டில் முதல் முறையாக குன்னூரில் சிறிய அளவிலான இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி செய்யப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details