தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2021, 1:11 PM IST

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

Top 10 news
Top 10 news

கோவிட்-19 - இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நக்சல் பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பத்து மாநில முதலமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமித் ஷா ஆலோசனை மேற்கொள்கிறார்.

சுகாதாரத் துறையை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை - வெங்கையா நாயுடு

நாட்டின் சுகாதாரத் துறை தேவையை நிறைவேற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ. அருள்

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இரா. அருள், பெண் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருவ் குண்டு: 12 வயதில் நாட்டுக்காக வீர மரணமடைந்த சிறுவன்

தாய் நிலத்தை நேசிக்க வயது தடையல்ல என்பதை உணர்த்திவிட்டுச் சென்றவர் துருவ் குண்டு, அவர் குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

பட்டியலின வேட்பாளரை மிரட்டிய திமுக - கமல் கண்டனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுக்களை திரும்பப்பெறச் செய்யும் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எனப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

யுபிஎஸ்சி தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்ச்சி - கௌரவித்த அமைச்சர்

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 750ஆவது இடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாட்டில், தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நள்ளிரவு கரையை கடக்கும் குலாப் புயல்; தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details