தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 News @ 1 PM
Top 10 News @ 1 PM

By

Published : Sep 22, 2021, 1:39 PM IST

1. 5 சவரனுக்கு மேல் பெற்ற நகைக்கடன்களை வசூலிக்க உத்தரவு

ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற நகைக் கடன்களை வசூலிக்க அனைத்துக் கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2. காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை - காந்தியின் பேத்தி

காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரை மண்ணில் கால்பதித்து இருப்பது பெருமையாக உள்ளதாக மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

3. கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை - சிபிஎஸ்இ அறிவிப்பு

கரோனாவில் பெற்றோரை இழந்து பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு தேர்வுக் கட்டணம் இல்லை என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

4. காந்தியின் சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும் - ஸ்டாலின்

தேசத்தந்தை காந்தியடிகள் மதுரையில் ஆடைப் புரட்சி செய்த இந்நாளை (செப்டம்பர் 22) நினைவுகூர்ந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் எனக் கூறியுள்ளார்.

5. நவம்பரில் மூன்றாம் அலை - எச்சரிக்கும் வல்லுநர்

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை நவம்பர் மாதத்தில் ஏற்படும் என இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் எச்சரித்துள்ளார்.

6. முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!

ஐநா சபைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார்.

7. விழுப்புரத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் அலுவலர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் கே.எஸ். பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

8. அஜித் ரசிகாஸ்.... இதோ வலிமை ரிலீஸ் தேதி

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள, 'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9. ‘திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும்’

திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதியளித்துள்ளார்.

10. நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு - நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கையைப் பாராட்டிய கமல்

நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதனை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கை உரக்கச் சொல்வதாகவும், சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான தேர்வுதான் நீட் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details