தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 22, 2021, 1:26 PM IST

1 விதிகளின்படி பாதுகாப்பு - மதுரை மாநகராட்சி

'இசட் பிலஸ்' பாதுக்காப்பில் உள்ள பிரமுகர்களுக்கு சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைஎன மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

2 நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு மீது விரைவில் விசாரணை

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி விதித்த ரூ. 1 லட்சம் அபராதத்தை செலுத்திய பின்னர் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 இரண்டு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் இன்று (ஜூலை 22) இரண்டு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4 அமைச்சர் வீட்டில் சோதனை - ஆவணங்கள் சிக்கவில்லை என வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர், நடத்தி வரும் சோதனை வழக்கமானது எனவும், ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என அவரது வழக்கறிஞர் செல்வம் தெரிவித்துள்ளார்.

5 கொற்கை அகழாய்வு - 4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி கொற்கை அகழாய்வில் நான்கு அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

6 இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் (மக்களவை, மாநிலங்களவை) இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

7 கரோனா - ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் நேற்று (ஜூலை 21) ஒரே நாளில் 38 ஆயிரத்து 652 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8 ஜிகா வைரஸ் - மீண்டும் ஒருவர் பாதிப்பு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9 ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை- மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

10 இனி கூகுள் மூலம் டிவிட்டர் பயன்படுத்தலாம்

டிவிட்டர் பயனாளர்கள் தங்களுடைய கூகுள் கணக்கை பயன்படுத்தி டிவிட்டரில் சைன்- இன் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details