தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 24, 2021, 1:20 PM IST

புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

அதிமுக, திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்பது பேர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் இன்று(மே.24) பதவியேற்றுக் கொண்டனர்

மூன்று லட்சத்தைத் தாண்டிய கரோனா உயிரிழப்பு!

நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

முழு ஊரடங்கு: வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு!

இன்று(மே24) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான கண்காணிப்பு பணிகளில் சென்னையில் 20 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுவர் என்றும், அத்துமீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்

சென்னை: தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்

தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

'கட்டளையை மீறி விமர்சித்தால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்' - அதிமுக தலைமை அதிரடி

சென்னை : இனிவரும் காலங்களில் அதிமுக தலைமையின் கட்டளையை மீறி, கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சிப்போர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவர் என அதிமுக தலைமை எச்சரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனையவற்றில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஊக்கத்தொகை வேண்டாம்... தரமான பிபிஇ கிட் போதும்' - செவிலியரின் ஆடியோ வைரல்

புதுச்சேரி அரசு மருத்துமனையில் பணியாற்றும் செவிலியருக்குத் தரமான பிபிஇ கிட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என செவிலியர் ஒருவரின் ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.


பெரம்பலூரில் சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று!

பெரம்பலூர்: நேற்று (மே.23) வருவாய் கோட்ட சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் 985 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார் - 14 பேர் உயிரிழப்பு!

ரோம்: இத்தாலியின் வடக்கே மலைப் பகுதிக்குச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details