தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

1 PM
1 PM

By

Published : Apr 28, 2021, 12:50 PM IST

1. ஸ்டெர்லைட்டிற்கு ஜூலை 31வரை மட்டுமே அனுமதி

ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ள ஸ்டெர்லைட் ஆலையை வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதிவரை மட்டுமே இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2. பயணிகள் இல்லாமல் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை: கரோனா இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்றும் போதிய பயணிகள் இல்லாமல் 50 உள்நாட்டு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

3. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 79ஆவது நினைவுநாள்

கரூர்: தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 79ஆவது நினைவுநாளையொட்டி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

4. தற்காலிக மருத்துவப் பணிக்கு நேர்காணல் - மாநகராட்சி

சென்னை: சென்னையில் ஓர் ஆண்டு தற்காலிகமாகப் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர் பணிகளுக்கு நாளை, நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5.கட்டிங் பிளேயரில் மறைத்துக் கொண்டுவந்த தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவிலிருந்து கட்டிங் பிளேயரில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட தங்கத்தை நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

6. 1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய அரசு ஆணை!

1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக கொள்முதல் - தமிழ்நாடு அரசு ஆணை

7. தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல்: கரோனா நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஹைதராபாத்: ஏப்ரல் 30 ஆம் தேதி தெலங்கானாவில் நடைபெறவுள்ள ஏழு நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தலின்போது எடுக்கப்பட்டுள்ள கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெலங்கானா உயர் நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று உத்தரவிட்டது.

8.'உலகம் இந்தியாவிற்கு உதவ வேண்டிய நேரமிது'

'உலகம் இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரமிது' என ஐ.நாவின் 75ஆவது கூட்டத்தொடர் தலைவர் வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.

9.’அஸ்ஸம் மக்களின் நலனுக்காகப் பிரார்த்திக்கிறேன்’- பிரதமர் மோடி

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 28) நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

10. நடைமுறைக்கு வந்தது டெல்லி ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம்!

டெல்லி: தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details