தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

By

Published : Apr 23, 2021, 1:05 PM IST

'பொறுப்பற்ற தன்மையால் தான் கரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது'

கடந்தாண்டு இதே நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது கள அளவிலான நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் கூறிய போதிலும், தற்போதைய மூன்று மடங்கு பாதிப்புகள் , அதிக இறப்பு விகிதங்கள் போன்றவை நெருக்கடியைத்தான் பிரதிபலிக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு - கருத்துக்கேட்பு கூட்டத்தால் பரபரப்பான ஆட்சியர் வளாகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.


சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு: ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்லக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.


காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள்

வெளி நாடுகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவர இந்திய விமானப்படை விமானங்கள் காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்றது.


ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சுமித்ரா மகாஜன் மரணமா? - சசி தரூரின் ஒற்றை ட்வீட்டால் குழப்பம்

முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதிவிட்ட ட்வீட், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்க்கு கரோனா உறுதி!

தெலங்கானா தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சர் கே.டி.ஆர்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாக ட்வீட் செய்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 பேராசிரியர் பணியிடங்கள் காலி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 300க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலத்தில் நிரப்பப்படாமல் காலியாக இருந்துள்ளது.

பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு ஐநா அழைப்பு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகள் அதிக அளவில் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஐநா பொது செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.


மீண்டும் கைகோர்க்கும் 'கர்ணன்' கூட்டணி!

'கர்ணன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் - தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details