தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திகள் TOP 10 NEWS @1PM - நண்பகல் 1 மணி செய்திகள்

நண்பகல் 1 மணி செய்திகள் TOP 10 NEWS @ 1PM

TOP 10 NEWS @ 1 PM
நண்பகல் 1 மணி செய்திகள் TOP 10 NEWS @ 1 PM

By

Published : Mar 1, 2021, 1:50 PM IST

தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்ஸல் சரண்!

தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டு காவலர்களால் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த நக்ஸலைட்டு ஒருவர் சரணடைந்தார்.

ஸ்டாலினை கொளத்தூரில் தலைதூக்க விடமாட்டேன் - திருநங்கை அப்சரா பளீர்!

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினைத் தோற்கடிப்பேன் என திருநங்கை அப்சரா தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கான 10 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின்

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் தமிழ்நாட்டிற்கான அடுத்த 10 ஆண்டுகளின் தொலைநோக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தொகுதி பங்கீடு: அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நிறைவு

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்த ஆலோசனை நிறைவுபெற்றது.

அதிமுக கூட்டணியில் இணைந்த மூமுக!

திமுக கூட்டணியில் இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

தேர்தல் அலுவலர்கள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு!

தேர்தல் அலுவலர்கள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

துணிக்கடையில் துணிகளை திருடும் கும்பல் சிக்கியது!

கோயம்புத்தூர்: ராமநாதபுரப் பகுதியிலுள்ள, துணிக்கடையில் துணிகளை திருடும் கும்பல் சிக்கியது.

தேர்தல் விதிமுறை மீறல்... திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரில் திமுக கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதாக திமுக பிரமுகர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details