தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Headlines

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News @ 1 PM
Top 10 News @ 1 PM

By

Published : Jan 22, 2021, 1:03 PM IST

கர்நாடகா வெடி விபத்து, பிரதமர், முதலமைச்சர் இரங்கல்!

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

16 வயது சிறுவனை செயின் பறிப்பில் ஈடுபடவைத்த ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 11ஆம் வகுப்பு மாணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடப்பாண்டில் 23.41% அதிகரித்த நெல் கொள்முதல்

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தற்போதுவரை 573.36 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23.41 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை

மாணவர்களின் உடல் நிலையில் பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஜிஹாதி கும்பலை சேர்ந்தவர் கடலூரில் கைது!

வன்முறை ஏற்படுத்தும் முயற்சியில் செயல்பட்டு வந்த "ஜிஹாதி" கும்பலின் தீவிர உறுப்பினரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கடலூரில் கைது செய்துள்ளனர்.

இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை: தப்பி ஓடிய கணவன் 2 மணிநேரத்தில் கைது

முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரும்பு பைப்பால் அடித்து இரண்டாவது மனைவியை கொலை செய்து தப்பி சென்ற கணவனை 2 மணிநேரத்தில் ஆவடி காவல் துறையினர் கைது செய்தனர்.

'மாமனிதன்' மக்கள் செல்வனுக்காக 'இசைஞானி' பாடிய பாடல் விரைவில் வெளியீடு!

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் இளையராஜா பாடிய பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு!

'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இபிஎல்: லிவர்பூலை வீழ்த்திய பர்ன்லி எஃப்சி!

இபிஎல் கால்பந்து தொடரில் இன்று (ஜன.22) நடைபெற்ற லீக் போட்டியில் பர்ன்லி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.

‘பாகிஸ்தானில் பாதுகாப்பாக உணர்கிறோம்’ - பாப் டூ பிளஸிஸ்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பாதுகாப்பாக உணர்வதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details