தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

By

Published : Jan 20, 2021, 1:29 PM IST

'ராஜபக்சேவை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என தோன்றுகிறது' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முள்ளிவாய்க்காலில் இரண்டு லட்சம் தமிழர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்சேவை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என தோன்றுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை - வைகோ கண்டனம்

இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகை தாக்கி மூழ்கடித்ததில் படகில் பயணம் செய்த மீனவர்கள் மாயமானதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தனிநபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது' - சென்னை உயர் நீதிமன்றம்

நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தனிநபர் அளிக்கும் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

’6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446’

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும்.

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 13,823 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 823 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 162 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

நேதாஜி பிறந்த தினம்: ரயிலுக்கு பெயர்சூட்டி கௌரவித்த இந்திய ரயில்வே!

நேதாஜி 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹவுரா-கல்கா மெயில் ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்ட கௌவித்துள்ளனர்.

அண்ணாத்த படம் தாமதம்: சூர்யா பக்கம் திரும்பிய சிறுத்தை சிவா!

அண்ணாத்த படம் தாமதம் ஆவதால் சூர்யா படத்தின் முதல்கட்ட வேலைகளை இயக்குநர் சிறுத்தை சிவா ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரம்பலூரில் 17 பவுன் நகை திருட்டு: காவல் துறையினர் விசாரணை!

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, 65 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனதையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

சிஎஸ்கேவிலிருந்து விடைபெற்ற ஹர்பஜன்; ட்விட்டரில் உருக்கம்!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் முடிந்து விட்டதாக, தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

'ரிஷப் பந்த் தனித்திறன் படைத்தவர்' - ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்த ரிஷப் பந்தை, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details