தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Oct 9, 2020, 1:15 PM IST

ஜிடிபி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்பு - ரிசர்வ் வங்கி தகவல்

ஜிடிபி வளர்ச்சி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி...!

டெல்லியில் உள்ள வீட்டில் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சட்டத்தின் முன் சட்டம் இயற்றுவோர்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏராளமான உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகள் தீர்ப்பிற்காக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்த தொகுப்பு...

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல்

30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்று தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு!

புதுச்சேரியில் பணிபுரியம் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 70 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 6ஆயிரத்து 151 ஆக உள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை - கடல் போல காட்சியளிக்கும் ஓசூர் மாநகர சாலைகள்!

சூர்,அதன் சுற்றுவட்டார பகுதிகளிலில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர சாலைகள் கடல் போல காட்சியளித்தன.

மேட்டூர் அணை நீர் நிறுத்தம்: 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பணி பாதிப்பு

டெல்டா பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் மேட்டூர் அணையில் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


நகை விற்று கிடைத்த ரூ.1.90 லட்சம் மாயம்: காவல் நிலையத்தில் பெண் புகார்!

அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நகையை விற்று வைத்திருந்த 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபாஸ்- தீபிகா படுகோனே படத்தில் இணைந்த பாலிவுட் மெகா ஸ்டார்!

பிரபாஸின் 21ஆவது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details