தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm - ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Oct 7, 2020, 1:00 PM IST

  • அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேஃப் மூவ்?

டெல்லியின் முழு ஆதரவு தற்போது தனக்கு இருப்பதால், சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்றாலும் தனது அரசியல் எதிர்காலத்தை பாதுக்காத்துக்கொள்ள முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கேடயமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • நவம்பரில் தொடங்கும் கோவாக்சின் 3ஆம் கட்ட சோதனை...!

பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சினின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை வரும் நவம்பரில் தொடங்கவுள்ளது.

  • சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் 6,653 இடங்களில் 497 இடங்கள் மட்டுமே தேர்வு!

பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் உள்ள 6,653 இடங்களில் 497 இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதால் 6,653 இடங்கள் காலியாக உள்ளன.

  • சைகை மொழியில் புத்தகங்கள் கிடைக்கும்: எஸ்எல்ஆர்டி.சி, என்.சி.இ.ஆர்.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்

காது கேளாத மாணவர்களின் நலனுக்காக இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Indian Sign Language Research and Training Centre - ISLRTC) மற்றும் என்.சி.இ.ஆர்.டி ஆகியவை வரலாற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • 'வேளாண் சட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை' - மத்திய அமைச்சர்

'வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்வது பற்றி நீண்டகாலமாகப் பேசிவருகிறோம்.

  • உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • மத்திய தொல்லியல் துறையின் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழ் - தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • கிணற்றுக்குள் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் மீட்பு!

கல்லுபாளையத்திலுள்ள விவசாய கிணற்றுக்குள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • திருமணம் குறித்து வெளியான பதிவு - விளக்கமளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

இயக்குநர் சீனு ராமசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியான திருமண பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்.

  • நடிகை ரியாவுக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details