தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 1, 2021, 8:55 PM IST

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

’தடுப்பூசி மட்டுமே தொற்றுகளிலிருந்து வெளிவருவதற்கான தீர்வு’ -

செங்கல்பட்டு: கரோனா தொற்று தடுப்பூசி மட்டுமே நோய்த்தொற்றுகளிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வு என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாதவர் சமுதாயத்தினருக்கு 15% இடஒதுக்கீடு கேட்ட வழக்கு தள்ளுபடி

மதுரை: தமிழ்நாட்டிலுள்ள யாதவர் சமுதாயத்தினருக்குப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில் 15 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடிசெய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' - பள்ளிக் கல்வித் துறைக்கு அலுவலர் நியமனம்

சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பெறப்படும் மனுக்களுக்குத் தீர்வு காண்பதற்கு ராமசுந்தரம் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை: முதலமைச்சர், சபாநாயகர் சந்திப்பு

புதுச்சேரி: நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி , தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் வாழ்த்துக்கூறிய நிலையில் அமைச்சரவை குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கறுப்பு பூஞ்சை சிகிச்சை: ஒன்றிய அரசை கேள்விகளால் துளைக்கும் ராகுல்

கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசின் வழிமுறைகளில் சிக்கி அலைக்கழிக்க வைப்பது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்தில், கரோனா தொற்று மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.

மீண்டும் அச்சுறுத்தும் சீனா: மனிதனுக்குப் பரவிய H10N3 பறவை காய்ச்சல்!

இந்தியா உள்பட உலக நாடுகள் பல கரோனா என்னும் கொடிய பெருந்தொற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில், சீனாவின் ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா அறிகுறிகள்: தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்

கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவிலிருந்து காக்க அனைவரும் தடுப்பூசி போடுங்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (ஜூன் 1) செலுத்திக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details