தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM

By

Published : Sep 28, 2020, 9:17 PM IST

பொறியியல் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு!

பொறியியல் மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று (செப்.28) வெளியிட்டார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கரோனா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி அமைப்பில் இருந்தவர் கைது!

சீன புலனாய்வு அமைப்புகளுக்கு நாட்டின் தகவல்களை ரகசியமாக பரிமாறிய சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே வசூலிக்கக் கோரி மனு!

தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலமே வசூலிக்க வேண்டுமென உத்தரவிட கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மக்கள் போராட்டமே பாஜக, சிரோமணி கூட்டணி முறிவுக்கு காரணம்: சுனில் ஜாகர்

மத்திய அரசின் வேளாண் சட்ட முன்வடிவுகளுக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாகவே பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் வெளியேறியதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்பிபிக்கு பாரத ரத்னா பரிந்துரை செய்த ஜெகன்மோகன் - நன்றி தெரிவித்த கமல்

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

தீவிர ரசிகை மரணம் - துடிதுடித்துப் போன ஓவியா!

நடிகை ஓவியா தனது தீவிர ரசிகை மரணமடைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2020: மும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்கு!

மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 201 ரன்களை குவித்தது .

‘சிரி ஏ’ : டிராவில் முடிந்த ரோமா - ஜுவென்டஸ் ஆட்டம்!

சிரி ஏ கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ரோமா - ஜுவென்டஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details