தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-pm
top-10-news-9-pm

By

Published : Jul 10, 2020, 9:01 PM IST

முதலமைச்சருக்கு அமெரிக்க விருது: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி பாராட்டி “பால் ஹாரிஸ் ஃபெலோ” என்ற விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

டிவி மூலம் வகுப்புகள் : அரசை நோக்கி கேள்விகளை எழும்பியுள்ள கமல்ஹாசன்!

சென்னை : தொலைக்காட்சி வழி கற்றலின் சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்கள் பற்றி எந்தவித களஆய்வும் செய்யப்படாமல் அவசரமாக எடுத்த முடிவாகவே தொலைக்காட்சி வகுப்பு அறிவிப்பை கருதுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்களை அரசே வழங்க வேண்டும் !

சென்னை : வெளிமாநிலத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விலையில்லா ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1.30 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 680 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.

சுரங்கப்பாதை கட்டுமானப் பணி - சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நாளை நடைபெற உள்ளதால் வரும் 25ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொடர்பான தவறான செய்திகளை வெளியிடும் ஆளுநர் மாளிகை - சுகாதாரத்துறை அமைச்சர்

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் இருந்து கரோனா தொடர்பான தவறான செய்திகள் வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் அரிசி கிண்ணத்தில் பயமுறுத்தும் புற்றுநோய்!

புவனேஷ்வர்: ஒடிசாவின் அரிசி கிண்ணம் புற்றுநோயாளிகளை உற்பத்தி செய்கிறதா? இது ஒடிசாவின் சோகக் கதையாக மாறினாலும்கூட, இதை உலக மக்கள் ஒரு பாடமாக எடுத்து இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

"படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா?" - குழப்பத்தில் ராஜ்குமார் ராவ்!

நடிகர் ராஜ்குமார் படம் பார்ப்பதா அல்லது சீரிஸ் பார்ப்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகளுக்கு பாக் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் - முஷ்டாக் அகமது!

லண்டன்: கரோனா காரணமாக தற்போது ஐசிசி விதித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் என அந்த அணியின் ஸ்பின் பயிற்சியாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தை நிலவரம்: சரிவில் இந்திய பங்குச்சந்தை!

சர்வதேச பங்குச் சந்தையின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தை இன்று சரிவில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details