தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am - TOP 10 NEWS 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 9 AM  9 மணி செய்திகள்
TOP 10 NEWS 9 AM 9 மணி செய்திகள்

By

Published : Feb 18, 2021, 9:05 AM IST

பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழல்: துணைநிலை ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார் தமிழிசை

புதுச்சேரியில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநராக இன்று பொறுப்பை ஏற்கிறார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தமாதம் 15ஆம் தேதி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

நாகையில் 31,000 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திற்கு மோடி அடிக்கல்!

31 ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று (பிப். 17) அடிக்கல் நாட்டினார்.

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் - ராகுல்

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் உருக்கமாகப் பேசினார்.

விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ்: அறுவடைசெய்த முதல் அரசியல் லாபம்

தற்போது பஞ்சாபில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எட்டில், ஏழு மாநகராட்சிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. பஞ்சாபில் கனிந்த இந்த வெற்றி அண்டை மாநிலமான அரியானாவிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் என்பது கதர்சட்டைக்காரர்களின் கணிப்பு.

'பட்டச்சித்ரா' வரைகலையில் பட்டையைக் கிளப்பும் பாக்யஸ்ரீ

ஒரு பொறியியல் பட்டதாரி ஓவியக்கலை மீது கொண்ட தீராக்காதலின் கதை இது. மென்மையான கற்கள், பழைய பாட்டில்கள், பியூஸ்போன பல்புகள் போன்றவற்றில், வண்ணமிகு ஓவியங்களைத் தீட்டி தனது கைவண்ணத்தால் அழகாக மாற்றுபவர்தான் இந்த பாக்கியஸ்ரீ.

கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்பது உலக சந்தையை மையப்படுத்தித் தான் இருக்கும் என்றும் கரோனா தாக்கம் உலகம் முழுவதும் நிலவி வரும் சூழலில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதைப் போல, பெட்ரோல் டீசல் விலையும் ஏற்றம் கண்டுவருவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் 240 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்டு அம்பத்தூர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் 240 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்!

மூடநம்பிக்கை ஒழிப்பில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் மீது, மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!

முதுகுளத்தூரில் அரசு அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details