தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - etv bharat latest news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news 7pm
top 10 news 7pm

By

Published : Jul 31, 2020, 7:04 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் மேலும் 5,881 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: வெள்ளி செங்கல் அனுப்பிய பாஜகவினர்!

சேலம்: அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோயிலுக்கு சேலத்தில் இருந்து 17.400 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளிச் செங்கல், சேலம் பாஜகவினரால் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் பெரியார் சிலை அவமதிப்பு... காவலர்கள் குவிப்பு!

திருவள்ளூர்: மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால், காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

கெஜ்ரிவால் அதிரடி! டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.38 குறைந்தது!

தேசிய தலைநகரில் 81.94 ரூபாயாக இருந்த டீசல் விலை இன்று (ஜூலை 31) 73.56 ரூபாயாக விற்கப்படுகிறது. 30 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16.75 விழுக்காடாக குறைத்து ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு இட்ட உத்தரவின் விளைவாக டீசல் விலை இந்த விலை இறக்கத்தைக் கண்டுள்ளது.

ரஜினியுடனான உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை - இயக்குநர் தேசிங் பெரியசாமி

சென்னை: ரஜினியுடனான தொலைபேசி உரையாடல் லீக்கானது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.

சீனாவுக்கு அடுத்த செக்! தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

இலகுவாக இருந்த வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

வருகிறது வாட்ஸ்அப் பே: ஜியோவுடன் சேர்ந்து போட்டி நிறுவனங்களை துவம்சம் செய்ய திட்டம்!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து சிறு குறு நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டத்தை வகுத்துவருகின்றனர்.

இனிதான் எனது ஆட்டம் ஆரம்பம் - டேவிட் வில்லி

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து பந்து வீச்சாளர் டேவிட் வில்லி தனது சிறப்பான ஆட்டம் இனிமேல் தான் வெளிப்படும் என தெரிவித்தார்.

மூன்றாவது நாளாக தொடர்ந்து இறக்கம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

மும்பை: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் இறக்கத்தில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details