தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம் - undefined

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 26, 2021, 7:19 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி

இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு நடைபெறுமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் பள்ளியை முந்திய அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளியை முந்தி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 19 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

போலி தடுப்பூசி போட்டு மயங்கி விழுந்த நடிகை!

கோவிட் போலி முகாமில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில தினங்களில் பிரபல நடிகை மிமி சக்ரபோர்த்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

'வாழ்க்கையே விளையாட்டு தான்' - நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்

இளமைக்கால கிரிக்கெட் போட்டி நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான் என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் போலி கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் திருட்டு!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் போலி அட்டையை பயன்படுத்தி இரண்டரை லட்சம் பணம் திருடப்பட்டுள்ள

ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 முதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாயக்கு பரோல்

அசாம் சட்டப்பேரவை உறுப்பினர் அகில் கோகாய்க்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க கோரிய மனு தள்ளுபடி

ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனக் காவல்துறை தரப்பில் அறிக்கைதாக்கல் செய்யபட்டதையடுத்து, பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு: காவல்துறை விசாரணை!

வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details