தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 22, 2021, 7:12 PM IST

1 வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட 1.50 கோடி ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட நீதிபதிகளையும் நோடல் அலுவலர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

2 கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய சிறைக்காவலர்கள்

திருப்பத்தூர்: வாணியம்பாடி சிறைக்காவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

3 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்: ஜெயபிரகாஷ் காந்தி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களில், தேர்வு எழுத விரும்புவோரின் விவரங்களைப் பெற்று உடனடியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

4 10 நாட்களில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

5 சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு நாள் - கனிமொழி எம்பி நேரில் ஆறுதல்

சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

6 தங்க மனிதன் குஞ்சல் பட்டேல் தற்கொலை!

அரசியல்வாதியும், தங்க மனிதன் என்று வர்ணிக்கப்பட்டவருமான குஞ்சல் பட்டேல் தற்கொலை செய்துகொண்டார்.

7 டெல்டாவைத் தொடர்ந்து டெல்டா பிளஸ் வகை கரோனா!

பெங்களூரில் உள்ள தேசிய உயிரி அறிவியல் மையம் நடத்திய மரபணு வரிசை முறையில், கர்நாடக மாநிலம் மைசூரில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

8 கோவாக்சினில் 77.8 விழுக்காடு செயல்திறன்!

கோவாக்சின் தடுப்பூசியில், 77.8 விழுக்காடு செயல்திறன் இருப்பது மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

9 அவைத்தலைவர் அறையில் காவியுடை சாமியார்கள் சிறப்பு பூஜை!

புதுச்சேரி அவைத் தலைவர் அறையில் காவியுடை சாமியார்கள் சிறப்பு பூஜை செய்தது சட்டப்பேரவை அலுவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 திருப்பதியில் ஜூலை மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details