தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 12, 2021, 7:11 PM IST

’ எனது கோரிக்கையை கலைஞர் நிறைவேற்றவில்லை’ - மருத்துவர் ராமதாஸ்

பள்ளிகளில் தமிழ் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றவில்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் பெண் அர்ச்சகர்கள்

கோயில் அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

டெல்டா பகுதிகளை ஏலத்தில் இருந்து விலக்குக - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

டெல்டா பகுதிகளில் இயற்கை அழிப்பு திட்டங்களுக்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு விடுத்துள்ள நிலையில், அதனை உடனடியாக திரும்பப் பெற மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்டாலின் புகைப்படம் அச்சிட்ட சான்றிதழ்: அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் பொருந்திய சான்றிதழை வழங்குவதாக, அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் உச்ச நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர்!

கரோனா ஊரடங்கினால் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் உச்ச நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் கே.எம். நடராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மெஹுல் சோக்சிக்கு பிணை மறுத்த டொம்னிகா நீதிமன்றம்

உடல் நிலை காரணம் காட்டி பிணை கேட்ட மெஹுல் சோக்சிக்கு டொம்னிகா நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதையடன் அடக்கம் செய்யப்பட்ட தலித் எழுத்தாளரின் உடல்

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பிரபல கன்னட தலித் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சித்தலிங்கையாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

அஜித்தின் பிஆர்ஓ வெளியிட்ட 'வலிமை'யான அப்டேட்!

சென்னை: நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக வெளிநாட்டில் சண்டைக்காட்சி எடுக்க வேண்டியுள்ளதாக அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

அப்போ 'சூரரைப் போற்று'...இப்போ 'மாஸ்டர்': ஐஎம்டிபியில் சாதனை படைக்கும் தமிழ் படங்கள்

சென்னை: பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் முதலிடத்தைபிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details