தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 7 PM
TOP 10 NEWS 7 PM

By

Published : Jan 27, 2021, 7:04 PM IST

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் - பின்வாங்கிய ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கம்

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை திரும்பப்பெறுவதாக ராஷ்டிரிய கிஸான் மஸ்தூர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு: கூட்ட நெரிசல் காரணமா?

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'பாய் ஃபிரண்டு இல்லையா, அப்போ மாணவிகள் கல்லூரிக்கு வராதீங்க' - போலி கடிதத்தால் குஷியான சிங்கிள் பாய்ஸ்!

ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி பெயரில் வெளியான போலியான கடிதம் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

'மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது' - ராஜகண்ணப்பன்

ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்கமுடியாது என திமுக தேர்தல் பணிக்குழு இணைத்தலைவர் ராஜகண்ணப்பன் பரமக்குடியில் பேசினார்.

ஆமை வேகத்தில் முதலமைச்சரின் துறை! - திமுக எம்பி புகார்!

சென்னை: முதலமைச்சரின் நெடுஞ்சாலைத்துறை 6 ஆண்டுகளாக மணலி மேம்பாலத்தை ஆமை வேகத்தில் கட்டி வருவதாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கரில் 12 பெண்கள் உள்பட 24 நக்ஸல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 பெண்கள் உள்பட 24 நக்ஸலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.

117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்! - சீமான் அறிவிப்பு!

கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் தேர்தலில் 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்

திருநெல்வேலி: சசிகலாவின் விடுதலையை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒட்டிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் - சத்யபிரதா சாஹூ

சென்னை: வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் எனத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

விக்ரமாதித்தனின் வேதாளம் 'பவுடர்' ராகவன்: ஹீரோவான பிஆர்ஓ!

சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிகராக அறிமுகமாகும் 'பவுடர்' படத்தின் டீசர் சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details