ஆவினில் தோண்டத் தோண்ட ஊழல்கள் - பால்முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் அதிகமான ஊழல்கள் நடந்துள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தினால் தோண்டத் தோண்ட நிறைய ஊழல்கள் வெளியே வரும் எனவும் பால்முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் வறுமைக்கோட்டுக்கீழ் உள்ளவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு ஒதுக்கீட்டின்கீழ், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 இடங்களில் சேர்ப்பதற்கு ஜூலை 5ஆம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதிமுகவினருக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் - இபிஎஸ்
ஆட்சி அதிகாரம் கையில் வந்ததும், திமுகவினர் காவல்துறையின் மூலமாக அதிமுகவினருக்கு எதிராக செய்யும் வன்முறையை உனடியாக நிறுத்த வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11ஆவது திருமணநாளைக் கொண்டாடும் தோனி - சாக்ஷி தம்பதி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, அவரின் மனைவி சாக்ஷி இருவரும் தங்களது 11ஆவது திருமண நாளை இன்று (ஜூலை 4) கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.