தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திகள்...

5 மணி செய்திகள்
5 மணி செய்திகள்

By

Published : May 9, 2021, 4:59 PM IST

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்த மத்திய அரசிற்கு கமல் ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்நாட்டில் 12 கரோனா சித்த மருத்துவ சிகிக்சை மையங்கள் அமைக்கப்படும்"

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை தருவதற்கு 12 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

'எல்லோருக்கும் எல்லாம் என்பதே லட்சியம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் லட்சியம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கரோனாவால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

இராமநாதபுரம்: மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

'சித்திரை வெயிலுக்கு ஜில்லென்று மழை' - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் - மம்தா கோரிக்கை

கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியை நீக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.

அரசின் அலட்சியப் போக்கே இரண்டாம் அலைக்கு காரணம் - லேன்செட் நிறுவனம் அறிக்கை

கோவிட் இரண்டாம் அலைக்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என லேன்செட் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேன்செட் அறிக்கை சுட்டி பிரதமர் மோடியை விமர்சிக்கும் எம்.பி.

கோவிட்-19 தொடர்பாக லேன்செட் நிறுவன ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை திரிணாமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு

கரோனா இரண்டாம் அலையில் சிக்கி தவிக்கும் டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அன்னையர் தினம்: எவ்வாறு தொடங்கியது?

ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட இந்த தினம், சமுதாயத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு காரணமாக, இறுதியாக 1911ஆம் ஆண்டில் அனைத்து அமெரிக்க மாநிலங்களுக்கும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அன்னாவின் அர்ப்பணிப்பும், அவர் தாய் மேல் அவருக்கு இருந்த மரியாதையும் 1914ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியல்வாதியும் வழக்கறிஞருமான உட்ரோ வில்சனால் அன்னையர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வழிவகுத்தது.

ABOUT THE AUTHOR

...view details