தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - national news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Oct 28, 2020, 5:22 PM IST

பாதுகாப்புப் படைகளைப் பாராட்டிய ராஜ்நாத் சிங்!

டெல்லி: தற்போதைய சூழலை பாதுகாப்புப் படை சிறப்பாகக் கையாண்டுவருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி மனு!

மதுரை : தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பரிசீலனை செய்யக் கோரிய மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியுறும் மாணவர்கள்!

சென்னை: புதிதாகத் தொடங்கப்பட்ட 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியதென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

'7.5% இடஒதுக்கீடு விவகாரம்... கையெழுத்திட பேனா இல்லையா ஆளுநரே?'

சென்னை: மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க அனுமதியளிக்காத ஆளுநரைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பாக பேனா வழங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டுகொள்ளாமல் கலங்கி நிற்கும் மன்னர் கால கலங்கரை விளக்கம்!

கன்னியாகுமரி: கடற்கரை கிராமத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தோணியில் நடந்த கடல் வாணிபத்தை இன்றும் சான்றுகூறும் கலங்கரை விளக்கம் உள்ளது.

தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டிலிருந்து போதைப்பொருள் பறிமுதல்!

மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.

இயந்திர அறிவியல் ஆற்றலை கற்றுக்கொடுக்க கைகோர்க்கும் மைக்ரோசாப்ட் - நெட்ஃபிளிக்ஸ்!

'ஓவர் தி மூன்' என்ற புதிய நெட்ஃபிக்ஸ் இணைய தொடர் மூலம் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட், மூன்று புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தரவு அறிவியல், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை கற்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச விமானங்களின் தடை நீட்டிப்பு

டெல்லி: சர்வதேச விமானங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வியன்னா ஓபன்: முதல் சுற்றில் அசத்திய ஜோகோவிச், தீம்!

ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான நோவாக் ஜோகோவிச், டோமினிக் தீம் ஆகியோர் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.

முதலிடத்திற்குப் போட்டியிடும் மும்பை - பெங்களூரு

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 48ஆவது லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details