தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Sep 28, 2020, 5:07 PM IST

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கரோனா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கியது திமுக' - க.பொன்முடி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்தது திமுக ஆட்சியில்தான் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் கூட அதிமுக முதலமைச்சர் வேட்பாளராகலாம் - உதயநிதி ஸ்டாலின்!

இரண்டு பேர் இணைந்து யார் முதலமைச்சர் என்று பேசி வருகின்றனர் எனவும், பாஜகவைச் சேர்ந்த நபரை கூட முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக அறிவிக்கக்கூடும் என்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை - காவல்துறையினர் விசாரணை

ஆன்லைன் வகுப்பு மற்றும் விரைவில் பள்ளி தொடங்கப்பட இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மாநிலங்களவைத் துணைத் தலைவர் விளக்கம்

தன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் விளக்கமளித்துள்ளார்.

இறுதிகட்ட பணியில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ’குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்..! ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.28) நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details