தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Sep 20, 2020, 5:02 PM IST

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள்...!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • ஐபிஎல் 2020: நேருக்கு நேர்... டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள், இந்தாண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தங்களது முதல் போட்டியை விளையாடவுள்ளனர்.

  • டெல்லி விரைந்த டிடிவி!

சென்னையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். சசிகலா விடுதலை குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்க தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

  • அண்ணாப் பல்கலைக்கழகத்தை பிரிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வேறு பெயர் சூட்டும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து, நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவார்கள் என அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  • கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

தருமபுரி: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள 45 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆறு மூலம் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைகிறது.

  • இரண்டு விருதுகள் பெற்ற அமைச்சர் வேலுமணி: முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: தேசிய நீர் புதுமை, டையல் ஃபார் வாட்டர் 2.0 ஆகிய திட்டத்திற்காக இரண்டு விருதுகள் பெற்ற அமைச்சர் வேலுமணிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • ஒரு வாரத்திற்குள் 31 ஆயிரத்து 661 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்ட உ.பி அரசு!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரு வாரத்திற்குள் 31 ஆயிரத்து 661 உதவி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

  • தெலங்கானாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய 400 காவலர்கள்!

ஹைதராபாத்: கடம்பா வனப்பகுதியில் காவல் துறைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 40 ஆண்டுகள் கடந்த பாலுமகேந்திரா படத்தைக் கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்!

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான கோகிலா திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை கொண்டாடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

  • உலகளவில் 9 லட்சத்து 61 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 61 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது

ABOUT THE AUTHOR

...view details