தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm

By

Published : Sep 19, 2020, 4:57 PM IST

  • வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

சென்னை: வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

  • ஆயுத தொழிற்சாலைகளின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியும்

ஆயுத தொழிற்சாலை வாரியத்தை பெருநிறுவனமாக்கும் முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களாக கேபிஎம்ஜி அட்வைசரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், கைதான் அண்ட் கோ லிமிடெட் ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் நியமித்துள்ளது.

  • முழு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!

கிருஷ்ணகிரி : மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வனத் துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

  • வனக்காவலரை எட்டி உதைத்த இளைஞர் கைது!

வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக வேட்டை தடுப்புக் காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • விளைநில‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தும் யானைகள்: விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் விளைநில‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தும் காட்டு யானைகளை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விர‌ட்ட விவ‌சாயிக‌ள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • ‘நீட் தேர்வை கண்டித்து பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்’- நாராயணசாமி வேண்டுகோள்!

மாணவர்களின் எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட நீட் தேர்வை, பொதுமக்கள் கண்டிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 'அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா

சென்னை : 'அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் தமன்னா - நபா நடேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.

  • ஓடிடியில் வெளியாகும் அனுஷ்கா திரைப்படம்!

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

  • ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த அணிகள் என்று கருதப்படும் மும்பை இந்தின்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 13ஆவது சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன.

  • ஏப்ரல் 2021-க்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி...!

வாஷிங்டன்: 2021 ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க அரசு வழிவகை செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details