தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - TOP 10 NEWS 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்.

5 மணி செய்திச்சுருக்கம்
5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 14, 2020, 4:52 PM IST

நாடு முழுவதும் 17 எம்.பி.க்களுக்கு கரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'நடப்பில் உள்ளதை தான் கூறியிருக்கிறார்' - மூத்த வழக்கறிஞர் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம்!

நடிகர் சூர்யாவின் கருத்தால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழந்து, பொதுமக்களே சட்டங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா கூறியிருக்கும் வேளையில், நடப்பில் உள்ளதை தான் சூர்யா தெரிவித்திருக்கிறார் என மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

'சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்' - நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

சென்னை: நடிகர் சூர்யாவின் நீதிமன்றம் குறித்த கருத்துக்கு நீதிமன்ற அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோவிட்-19 பாதுகாப்புப் பெட்டகம்!

இன்று (செப்.14) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு கோவிட்-19 பாதுகாப்புப் பெட்டகம் வழங்கப்பட்டது.

நீட் அச்சத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை அரசு ஊக்குவிப்பதுபோல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்திய பூஷண்!

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் அபராதத்தை அவர் இன்று செலுத்தினார்.

மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதே தற்சார்பு இந்தியா - ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: பிரதமர் மோடி மயில்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதால், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். இதைத்தான் மோடி அரசு தற்சார்பு இந்தியா எனத் தெரிவிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய டொமினிக் தீம்!

நியூயார்க் : யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீரரான டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

'ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்' - காணொலி வெளியிட்ட சூர்யா

கரோனா நெருக்கடியில் மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர், நாம் நினைத்தால் அதை மாற்றலாம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சுந்தர் சி

சென்னை: சுந்தர் சி தயாரிப்பில், பிரசன்னா - ஷாம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்புப் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details