தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - TOP 10 NEWS 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம் இதோ...

5 மணி செய்திச்சுருக்கம்
5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 10, 2020, 5:02 PM IST

சித்த மருத்துவத்தை புறக்கணிக்கவில்லை- மத்திய அரசு!

சென்னை: பணி மூப்பின் அடிப்படையிலேயே ஆயுர்வேதம் படித்த நபரை சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு நியமித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

'எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: எட்டு மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள்: துக்ளக் சொல்வதை ஏற்கிறதா அதிமுக?

சென்னை: "அதிமுகவுக்கு புத்திசாலிகள் வாக்களிக்க மாட்டார்கள்" என்று துக்ளக் பத்திரிகை வெளியிட்ட கேலி சித்திரத்தை திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டு அதிமுகவிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சமி நில விவகாரம்: ஆர்.எஸ் பாரதிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில், கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேரியிடம் நேற்று (செப். 9) அமலாக்கத் துறை அலுவலர்கள் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மம்தா பானர்ஜி அரசு ’இந்து எதிர்ப்பு’ மனநிலையைக் கொண்டுள்ளது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

டெல்லி : திரிணாமுல் காங்கிரஸ் அரசு ’இந்து எதிர்ப்பு’ மனநிலையைக் கொண்டிருப்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

“நவாஸ், கிலானி, சர்தாரி ஊழல் குற்றவாளிகள்” - பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி, பிரதமர்கள் நவாஸ் ஷெரீஃப், கிலானி ஆகியோர் ஊழல் குற்றவாளிகள் என அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாதக் கடன் தவணை செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடனில் சேர்க்கக்கூடாது: உச்ச நீதிமன்றம்

முன்னதாக, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து முடிவெடுக்க மத்திய அரசு கால அவகாசம் கோரியிருக்கும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை மாதக் கடன் தவணை செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடனின் சேர்க்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா: தட்றோம்... தூக்குறோம் திரைப்படம் தேர்வு!

நடிகர் டீஜேய் அருணாசலம் நடித்த 'தட்றோம்... தூக்குறோம்' திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

'திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்குகளுக்கு அழிவு என்பது இல்லை'

திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்குகளுக்கு அழிவு என்பது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details