தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 5:03 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm

"திருக்குறள் அற்புத ஊக்குவிப்பு நூலாகும்" - பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: திருக்குறள் அற்புத ஊக்குவிப்பு நூல் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் ஜாதவை சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் - இந்தியா

டெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவை தூதரக அலுவலர்கள் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சச்சின் பைலட்டை தக்கவைக்க இறுதிக்கட்ட முயற்சியில் களமிறங்கிய ராகுல்

டெல்லி: சச்சின் பைலட்டை தக்கவைக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சுஷாந்த் மரணம்; துபாய் டான் தொடர்பில் பாலிவுட்டின் முக்கியப் புள்ளிகள்' - சிபிஐ விசாரணை கோரும் சு. சுவாமி

மும்பை: சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். துபாய் டான் ஒருவருடன் தொடர்பிலிருக்கும் பாலிவுட்டின் பிரபலங்கள் வழக்கை மூடி மறைக்க முயல்வதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் 6 லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!

ஹைதராபாத்: உலகளவில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 81 ஆயிரத்து 365 ஆகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 86 ஆயிரத்து 128 ஆகவும் அதிகரித்துள்ளது.

நீயா, நானா? காங்கிரஸில் தொடரும் சீனியர்ஸ் vs ஜூனியர்ஸ்

இளம் தலைவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக் விஜய சிங் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியில் ஒரு பிரிவினர், எதிர்காலத்திற்கு இளம் தலைவர்கள் முக்கியம் எனக் கூறி இப்பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகின்றனர்.

காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர்... டிக்கியில் கட்டுக்கட்டாய் பணம் - வழக்கில் புதிய திருப்பம்

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து எளாவூர் வழியாக சென்னைக்குக் கடத்திவரப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணம், பிரபல நகைக்கடை வியாபாரிக்குச் சொந்தமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின்கட்டண உயர்வு - திமுக சார்பில் 21இல் ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்கட்டண உயர்வைக் கண்டித்து, திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்களுக்கு கானல்நீராகும் ஆன்லைன் கல்வி!

கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், நாட்டில் உள்ள பல்வேறு கிராமங்களில் மோசமான இணைய சேவை கிடைப்பதால், மாணவர்கள் கல்விக் கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

5 மாற்று வீரர்களை அனுமதிக்கும் விதி 2021 வரை நீட்டிப்பு - ஃபிஃபா

கரோனா காரணமாக கால்பந்து தொடர்கள் முடிவடைவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், 5 மாற்று வீரர்கள் அனுமதிக்கும் விதி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஃபிஃபா அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details