தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 3 PM - 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-3-pm
top-10-news-3-pm

By

Published : Jul 31, 2021, 3:21 PM IST

1.எல்லை சச்சரவு- இந்தியா சீனா மீண்டும் பேச்சுவார்த்தை

இந்தியா சீனா இடையே எல்லை சச்சரவு தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்கியது.


2.கோவாவில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் வன்புணர்வு- பொறுப்பில்லாமல் பேசிய முதலமைச்சர்!

கோவா மாநிலத்தில் அடுத்தடுத்து சிறுமிகள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பொறுப்பில்லாமல் பேசிய நிலையில் தற்போது தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.


3.’மாஸ்க் அப் தமிழ்நாடு’ - கரோனா விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்

கரோனா மூன்றாம் அலையை வரும் முன் காக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா விழிப்புணர்வு பரப்புரையை இன்று தொடங்கிவைத்தார்.

4.போட்டாச்சு... போட்டாச்சு... ராகுல் காந்தி!

ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


5.இந்தியில் பேசிய ஒன்றிய அரசின் அலுவலர்கள்: தமிழ்நாடு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு

ஒன்றிய கனிமவள சீராய்வு ஆணைய அலுவலர்கள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


6.இருசக்கர வாகன விபத்து - சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

கொடைக்கான‌லுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த 40 வயதுடைய நபர் ஒருவர் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


7.பிகார் ரயில் நிலையத்திற்குள் புகுந்த நக்சல்கள்... ஸ்டேஷன் மாஸ்டர் சிறைப்பிடிப்பு!

பாட்னா: சவுரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரை நக்சல்கள் சிறைப்பிடித்ததால், பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

8.நடுவானில் திக் திக்... தாமதமாக உணர்ந்த விமானிகள்... திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய விமானம்!

சவுதி அரேபியா சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.


9.ஸாரி இந்தியா- அதானு தாஸ் உருக்கம்!

மன்னித்து விடுங்கள் இந்தியர்களே, என்னால் நாட்டுக்குப் பெருமைசேர்க்க முடியவில்லை. ஆனாலும் நாம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அதானு தாஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


10.டப்பிங் கொடுக்கும் ஆர்னவ் விஜய்: பெருமைப்படும் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் களம் இறங்கும் நடிகர் அருண் விஜyயின் மகன் ஆர்னவ் விஜய், தான் நடிக்கும் படத்திற்கு தற்போது டப்பிங் கொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details