தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 14, 2021, 11:01 PM IST

இரண்டாவது தவணை ரூ.2000 நாளை முதல் வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

கரோனா நிவாரண இரண்டாவது தவணை ரூ 2000, 14 மளிகைப் பொருட்கள் நாளை முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

'சாராய பாட்டில்தான் எஞ்சாமி' - சூடமேற்றி எஞ்சாயி செய்த திமுக தொண்டர்

டாஸ்மாக் கடை முன்பு திமுக தொண்டர் ஒருவர் சாராய பாட்டிலுக்கு சூடம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தார்.

மாஸ்க் போடாதவர்களுக்கு மரண பயம் காட்டிய ஊராட்சி

முக கவசம் அணியாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை மயானத்திற்கு அழைத்துச் சென்று ஊராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுத்த வழக்குகளை வாபஸ் பெற்ற சபாநாயகர் அப்பாவு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடுத்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார்.

கேமர் மதனின் யூ-ட்யூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பிய காவல் துறை

கேமர் மதனின் சேனல், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் நிர்வாகத்தினருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி வழியாக லட்சத்தீவு செல்லும் திட்டத்தை கைவிட்ட பிரஃபுல் படேல்

பிரஃபுல் படேலின் புதிய நிர்வாக நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அங்குள்ள மக்களை காங்கிரஸ் தரப்பில் சந்தித்து பேச அனுமதி கோர விரும்பினோம். ஆனால், அவர் கொச்சிக்கு வருவதை தவிர்த்துவிட்டார் என்றார்.

நாட்டின் கரோனா இறப்புகள் அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டதைவிட மிக அதிகம் - ஓவைசி எம்.பி.

கரோனாவினால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்பது உண்மையான பாதிப்பைக் காட்டாத வண்ணம் உள்ளது என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவுடனான எல்லைப் பகுதியை ஜூன் 30 வரை மூடிய வங்கதேசம்

டாக்கா: எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்துவருவதால், இந்தியாவுடனான எல்லை மூடல் உத்தரவை ஜூன் 30ஆம் தேதி நீட்டித்து வங்க தேசம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட யோகி பாபு

சென்னை: நடிகர் யோகி பாபு இன்று(ஜூன் 14) கரோனா தடுப்பூசியின் முதல் தவணையைச் செலுத்திக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details