தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - நரேந்திர மோடி

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm

By

Published : Feb 28, 2021, 3:27 PM IST

ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் மிக முக்கிய தேர்தல் என்பதால், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வீரியத்துடன் பரப்புரை செய்து வருகின்றன. குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.

'உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ்!' - மோடி பெருமிதம்

உலகின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் எனப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதனைக் கற்றுக்கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

நெல்லையப்பரை வழிபட்ட ராகுல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்செய்தார். அங்கு அவருக்குப் பரிவட்டம் கட்டி, சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு (MBC-V) வழங்கி இயற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார்.

கொளத்தூரில் 3ஆவது முறையாக களம் காணும் ஸ்டாலின்: ஹாட்ரிக் வெற்றிக்கு அச்சாரம்!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்தார்.

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51

காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' ரீமேக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. இப்படம் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌ ரீமேக்காகிறது.

இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில் கொலையாளி கைது!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இளம் பட்டதாரி பெண் கொலை வழக்கில், கொலையாளி கைதுசெய்யப்பட்டார்.

'நல்ல பிட்ச் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் ?' - கொதித்தெழும் அஸ்வின்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்ததையடுத்து, மைதானத்தின் தன்மை குறித்த சர்ச்சையான கேள்விகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் காட்டமான பதிலை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details