தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 pm news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 25, 2020, 3:29 PM IST

7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்!

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பாஜகவிற்கு துதிபாடுவார்? - கனிமொழி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பாஜக அரசிற்கு துதிபாடிக் கொண்டிருப்பார் என திமுக எம்பி., கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னைக்கு ஆபத்து: 'குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்'

சென்னைக்கு ஆபத்து ஏற்படுத்த காத்திருக்கும் குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

'பண்டிகை நேரத்தில் மக்கள் உள்ளூர் பொருள்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள்' - பிரதமர் வேண்டுகோள்

டெல்லி: பண்டிகை காலங்களில் உள்ளூர் பொருள்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பாஜகவினர் உள்ளனரா? - தினேஷ் குண்டு ராவ்

கோவா: வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு பாஜகவினருக்காவது நோட்டீஸ் அனுப்பியுள்ளதா என தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நண்பர்களை இப்படியா விமர்சிப்பார்கள்? - இந்தியா குறித்த ட்ரம்பின் பேச்சுக்கு பிடன் பதிலடி

வாஷிங்டன்: இந்தியாவில் காற்றின் தரம் இழிவாக உள்ளது என்ற அதிபர் ட்ரம்ப் பேச்சை ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்!

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

விக்ரம் பிரபுவிற்கு ஒளியாகிய வாணி போஜன்

விக்ரம் பிரப நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு பாயும் ஒளி நீ எனக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்படவிழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’

கடந்தாண்டு வெளியான அந்தாலஜி படமான சில்லு கருப்பட்டி, தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details