தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : Sep 28, 2020, 3:21 PM IST

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, எஸ்பிபி சரண் செய்தியாளர்கள் சந்திப்பு!

மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை தொடர்பாக, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, எஸ்பிபி சரண் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

சிக்கிய இரிடியம் உண்மையானதா? - எஸ்பி அளித்த தகவல்கள்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓவிலிருந்து மாயமாகி, தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெவித்துள்ளார்.

குடும்பத்தகராறு: இரு குழந்தைகளோடு தீக்குளித்து உயிரிழந்த தாய்!

கணவனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தாய் தனது இரண்டு குழந்தைகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இவ்விபத்தில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 'கோவிஷீல்ட்' பரிசோதனை தொடக்கம்!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' பரிசோதனை தொடங்கியுள்ளதாக, மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பூ சந்தையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: தடயவியல் நிபுணர்கள் நேரில் ஆய்வு!

வள்ளியூர் அருகே காவல் கிணறு பகுதியில் உள்ள பூ சந்தையில் திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். தொடர்ந்து, பொதுமக்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாசாவின் வாய்ப்பை மறுத்த இந்திய இளைஞர்... காரணம் தெரியுமா?

பிகாரைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால் ஜி நாசாவால் வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று முறை மறுத்துள்ளார். இதற்காக அவர் கூறும் காரணத்தைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள்... இது குறித்து அவர் என்ன கூறுகிறார் கேட்போம்...

வெற்றி நாயகனான முகேன் ராவ்

முகேன் ராவை 'வெற்றி' கதாபாத்திரத்திற்கு எதேச்சையாகதான் தேர்ந்தெடுத்தோம் என இயக்குநர் அஞ்சனா அலி கான் தெரிவித்துள்ளார்.

ஆண் குழந்தைக்கு அப்பாவான 'ஜோக்கர்' வகீன் ஃபீனிக்ஸ்

வகீன் ஃபீனிக்ஸ் மனைவியும் நடிகையுமான ரூனி மாரா தம்பதி முதல் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.

ஆர்மீனியா, அஜரி படைகளுக்கு இடையே மோதல்: 23 பேர் உயிரிழப்பு

அஜரி, ஆர்மீனியா படைகளுக்கு இடையே நடந்த மோதலில் 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details