தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

By

Published : Jun 23, 2021, 12:57 PM IST

பேரவை: உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிச.31 வரை நீட்டிக்க சட்டமுன்வடிவு தாக்கல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை, டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமுன் வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

'கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!'

சென்னை: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இனிகோ இருதயராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!

ஜூன் 23ஆம் தேதியான இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

மின்வெட்டுக்கு அணிலும் ஒரு காரணம் என்பதைப் புகைப்பட ஆதாரத்துடன் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தீவிரமடையும் டெல்டா பிளஸ்... மக்களே உஷார்: 3 ஆம் அலை ஆரம்பமா?

டெல்டா பிளஸ் கரோனா கவலை தரக்கூடியது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பாதித்துள்ளது'

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் - உயர்நிலை, மேல்நிலைப் பாடத்திட்டம், மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் மாநில அரசின் உரிமைகளை 'நீட்' தேர்வு பாதித்துள்ளது என மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் புகார் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த இழுபறி: ஆளுநரிடம் அமைச்சர்கள் பட்டியலை வழங்கிய ரங்கசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதலமைச்சர் ரங்கசாமி ஐந்து அமைச்சர்களை உள்ளடக்கிய பட்டியலை வழங்கினார்.

இந்தியாவில் 3 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன் 22) ஒரேநாளில் 50 ஆயிரத்து 848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

மருத்துவக்கல்வி: இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்காதது மாபெரும் அநீதி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details