தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM - காலை 11 மணி செய்தி சுருக்கம்

காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 11 மணி செய்தி சுருக்கம்
காலை 11 மணி செய்தி சுருக்கம்

By

Published : Aug 30, 2021, 11:18 AM IST

1. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட் 30) வெற்றிபெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் நான்கு வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2. பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதலமைச்சர் இன்று ஆலோசனை

அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்புகள் குறித்தும், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3. வெளிநாடு புறப்பட்டார் விஜயகாந்த்

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மருத்துவத்திற்காக இன்று (ஆகஸ்ட் 30) துபாய் புறப்பட்டுச் சென்றார்.

4. வரலாற்றுச் சாதனை: தங்கம் வென்ற முதல் பெண் அவனி லெகாரா

பாரா ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

5. பதக்கத்தைக் குவிக்கும் இந்தியா; ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளனர்.

6. PARALYMPICS: வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா; இந்தியாவுக்கு 5ஆவது பதக்கம்

பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்று, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான ஐந்தாவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

7. HBD ஆனந்த் பாபு - மறக்க முடியுமா 'பூங்குயில் ராகமே' நாயகனை!

நடனத்தில் புதிய பாணியை உருவாக்கி 1980-களில் ரசிகர்களைத் தன்வசப்படுத்திய நாயகன் ஆனந்த் பாபு.

8. இது கரோனா காலம்... கர்ப்பிணிகளே அலட்சியம் கூடாது; அச்சமும் வேண்டாம்!

கரோனா காலத்தில் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவு பற்றியும், எக்லாம்ப்சியாவிலிருந்து (கர்ப்ப கால வலிப்பு நோய்) அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கான முறை குறித்தும் காணலாம்.

9. சென்னை ↔ இங்கிலாந்து விமான சேவை மீண்டும் தொடக்கம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு தனது முதல் விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நாளை (ஆகஸ்ட் 31) மீண்டும் தொடங்குகிறது.

10.சு.சுவாமியின் கருத்தைச் சுட்டிக்காட்டி பணமாக்குதல் திட்டத்தைச் சாடிய பிடிஆர்!

உள்கட்டமைப்பை குத்தகைக்குவிடும் 'பணமாக்குதல் திட்டம்' குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ABOUT THE AUTHOR

...view details