தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 20, 2021, 1:08 PM IST

1. தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2. HBD நக்கல் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி

நக்கல் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி இன்று (ஜுன்.20) தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3. 'மெட்ரோ ரயிலில் ஊர் சுற்றிப்பார்த்த குரங்கு’ - வைரல் வீடியோ!

டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

4. விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - கால் செய்தவரை தட்டி தூக்கிய போலீஸ்!

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மேலாளருக்குத் அழைத்த நபரை, சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

5. மாநில அரசின் உரிமையை இந்த அளவு எந்த ஒன்றிய அரசும் பறித்ததில்லை - நிதியமைச்சர் பிடிஆர்

மாநில அரசு கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும். மாநில அரசின் உரிமையை இந்த அளவு எந்த ஒன்றிய அரசும் பறித்ததில்லை.

6. 'வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

போலி விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து அந்நிறுவனம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றியுள்ளது.

7. ஆக்சிஜன் உற்பத்தி மையம் ராணுவ மருத்துவமனையிடம் ஒப்படைப்பு

தடையின்றி மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில், செகந்திராபாத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் ராணுவ மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8. ட்ரோன்கள் மூலம் மருந்துகள் டெலிவரி செய்ய சோதனை!

சிக்கபல்லாபுர் மாவட்டத்தில் ட்ரோன்களைக் கொண்டு மருந்துகளை வீடுகளுக்கு டெலிவரி செய்ய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9. 5 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கிய இயக்குநர் சுசீந்தரன்

இயக்குநர் சுசீந்தரன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார்.

10. மகனுடன் சேர்ந்து மரம் நட்டு வைத்த அஜய் தேவ்கன்

மும்பை: நடிகர் அஜய் தேவ்கன் அவரது மகனுடன் சேர்ந்து மரம் நட்டு வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details