தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 25, 2021, 1:06 PM IST

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு!

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கிராமப்புறங்களில் தொற்றுப் பரவலை எப்படி தடுப்பது? விளக்குகிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்!

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை விளக்குகிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

கடலூர் எம்.எல்.ஏ.,வுக்கு கரோனா பாதிப்பு உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலுார்: சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் காரில் கடத்தல்!

சென்னை: பிரியாணி கடை உரிமையாளரைக் காரில் கடத்திய காவலர் உள்ளிட்ட கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நாளை முதல் ட்விட்டர், வாட்ஸ்அப் முடக்கமா?

மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்தாத வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் நாளை முதல் செயல்படுமா, இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாகும் 'யாஷ்'

"யாஷ்" புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!

இந்தியாவில் நீண்ட நாள்களுக்கு பின்னர், ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை பரவலைத் தொடர்ந்து, தற்போது மஞ்சள் பூஞ்சை பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!

பமாகோ: மாலி நாட்டின் அதிபர், பிரதமரை அந்நாட்டின் ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறந்தநாள் வாழ்த்துகள் ‘கவுன்டர் கிங்’ கவுண்டமணி!

‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்ற வசனத்தின் மூலம் ‘பரட்டை’ என்ற ரஜினியின் கதாபாத்திரத்தை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தவர் கவுண்டமணிதான். இந்த கவுன்டர் கிங் இன்று தனது 82ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details