தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

By

Published : May 14, 2021, 1:11 PM IST

1. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி...995 ரூபாய்க்கு விற்பனை!

ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விற்பனை விலை 995.40 ரூபாய் ஆகும். இதில், ஜிஎஸ்டி 47 ரூபாய் அடங்கும்.

2. நீயா படம் போல் வஞ்சம் தீர்க்கிறதா பாம்புகள் - கர்நாடகாவில் வினோத சம்பவம்!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பாம்புகள் தொடர்ச்சியாக கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. தொழில்நுட்ப கோளாறு: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெறாது என, வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்நாட்டிற்கு முதல் ஆக்ஸிஜன் ரயில் வருகை!

மேற்குவங்க மாநிலத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் சிறப்பு ரயில் இன்று (மே.14) அதிகாலை சென்னை வந்தடைந்தது.

5. அரசு வழக்குகளில் ஆஜராவதற்கு 17 வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

6. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

7. 2 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை

நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 599ஆக அதிகரித்துள்ளது.

8. ரெம்டெசிவிர் கடத்தல்: நான்கு பேர் கைது!

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு பேரை மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

9. தொழில்நுட்ப கோளாறு: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நடைபெறாது என, வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. 25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் அஜித்!

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ. 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details