தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - etv bharat news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

1PM
1PM

By

Published : May 8, 2021, 1:10 PM IST

1.தமிழ்நாடு முழு ஊரடங்கு: இயங்குவதும், இயங்காததும்?

தமிழ்நாட்டில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பொதுமக்களுக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

2.அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை கோரிய வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய வழக்கில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் நிலைமை மோசம் - மத்திய அரசு கவலை

சென்னை உள்ளிட்ட நாட்டின் 30 மாவட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன என மத்திய சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

4.மலைப்பாதையில் கவிழ்ந்த 2 லாரிகள் - ஓட்டுநர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர்!

ஆசனூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகின.

5.சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு: சர்பத் பாட்டிலால் தாக்கப்பட்ட சகோதரி!

திருச்சி: மணப்பாறை அருகே சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் குறுக்கே வந்த சகோதரியை சர்பத் பாட்டிலால் தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6.தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் வருகிற 10.ஆம் தேதி முதல் 24.ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

7. கரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதி - குறைவாக பயன்படுத்தப்பட்டதா?

மத்திய அரசு இதுவரை கரோனா தடுப்பூசி திட்டத்துகாக ரூ.4,744 கோடியை செலவழித்துள்ளது. இது இந்த நிதி ஆண்டின் மொத்த தடுப்பூசி பட்ஜெட்டில் 14 சதவிகிதத்துக்கும் குறைவானதாகும்.

8. கொல்கத்தாவில் வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டது ஏன்?

கொல்ககத்தா: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

9. 108வது சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் ஜிவால், 108வது சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.

10. தலைவி பட நடிகை கங்கனாவுக்கு கரோனா

சென்னை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details