தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am - Flash news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

Top 10 @ 11 AM
Top 10 @ 11 AM

By

Published : Jan 23, 2021, 10:56 AM IST

நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் விழா; கொல்கத்தா செல்கிறார் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) கொல்கத்தா செல்கிறார்.

முத்தூட் நிதி நிறுவன கொள்ளையர்கள் ஹைதராபாத்தில் பிடிபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிடிபட்டனர்.

கோவையில் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜனவரி 23) கோவையில் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

தீக்காயத்தால் காட்டு யானை உயிரிழந்த விவகாரம் - விடுதி உரிமையாளர்கள் 2 பேர் கைது

நீலகிரி: மசினகுடி அருகே தீக்காயத்தால் காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தை குறிவைக்கும் காங்கிரஸ்; மக்களை கவர்வாரா பிரியங்கா காந்தி?

பிரியங்கா காந்தியின் புகைப்படம் அடங்கிய காலண்டர்களை காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் விநியோகித்துவருகிறது.

டெல்லி போராட்டத்தில் கொலை முயற்சி? விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்தில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபரை சிறைபிடித்துள்ளதாக போராட்ட தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘மாணவர்களின் மருத்துவ கனவை தடுத்து நிறுத்திய கிரண்பேடி பதிலளிக்க வேண்டும்’ - நாராயணசாமி!

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை தடுத்து நிறுத்தியதற்கு கிரண்பேடி பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

'கணக்கில் காட்டாத ரூ.120 கோடி முதலீடு' - விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு சம்மன்!

வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து... கரும்புகையால் சூழப்பட்ட ராயபுரம்!

ராயபுரத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

ஆஸ்திரேலியன் ஓபன்: ஆண்டி முர்ரே விலகல்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details