தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - TOP 10 1 PM NEWS

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

By

Published : Aug 21, 2020, 1:44 PM IST

1. 'ஓபிஎஸ்-இபிஎஸ் என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுக்கு வேதம்!

திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் என்ன சொல்கிறார்களோ அதுதான் தங்களுக்கு வேதம் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

2. மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் எப்போது தொடங்கும்? - அரசு விளக்கமளிக்க உத்தரவு

சென்னை: மேல்நிலைப் பள்ளி வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது தொடங்கவுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. ஓராண்டைக் கடந்த சந்திரயான்-2: 4,400 முறை நிலவைச் சுற்றியதாம்!

சென்னை: சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டைக் கடந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

4. விஸ்வரூபம் எடுக்கும் ஃபேஸ்புக் விவகாரம்: சசி தரூருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

டெல்லி : ஃபேஸ்புக் நிறுவனத்தின் உயர் மட்ட அலுவலர்களை விளக்கமளிக்கக்கோரி, தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பாணை அனுப்பிய நிலையில், நிலைக்குழுவின் தலைவர் சசி தரூர் உரிமை மீறிவிட்டதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார்.

5. கரோனாவால் யாரும் செல்ல விரும்பாத 'மோடி' குகை!

டேராடூன்: கேதர்நாத் கோயில் அருகே பிரதமர் மோடி சென்று பார்வையிட்ட குகையை, கரோனா காரணமாக ஒருவர் கூட புக்கிங் செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6. முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் நாங்கள் திமுகவினரை புறக்கணிக்கவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம்: முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் திமுகவினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு பொய்யானது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

7. வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி!

சென்னை: தனிநபர் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

8. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள்

சென்னை : நாளை (ஆக. 22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

9. மன அழுத்தமா? உணவுப் பழக்கத்தையும் கொஞ்சம் மாத்துங்க பாஸ்!

ஊரடங்கு காலத்தில் தொற்று குறித்த அச்சங்கள் அதிகரித்து மன அழுத்தத்திற்கான அறிகுறிகளுடன் வலம் வரும் நபர்களுக்கானது இந்தக் கட்டுரை.

10. ”ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு இல்லை!” - ரெய்னாவுக்கு பிரதமர் கடிதம்!

டெல்லி : சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details