வண்டலூர்- மீஞ்சூர் 400அடி வெளிவட்ட சாலையில் பட்டாபிராம் அருகே புதிதாக அமையவுள்ள சுங்கச்சாவடியில் திருநின்றவூரைச் சேர்ந்த வெங்கடேசன்(50), காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்றிரவு, சுங்கச்சாவடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த லாரி ஓட்டுனர் சிவகுமார் என்பவரை வழிப்பறிக் கொள்ளையர்கள் தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அதனை வெங்கடேசன் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது,கொள்ளையர்கள் வெங்கடேசனைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின்பு மற்றொரு லாரி ஓட்டுநர் நரேஷ் குமார் என்பவரைத் தாக்கி, அவரிடமிருந்து செல்போன், 4 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
ஆவடி சுங்கச்சாவடி காவலர் கொலை இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிவகுமாரை சிகிச்சைக்காகவும், காவலர் வெங்கடேசன் உடலை உடற்கூறாய்விற்காகவும் கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக கொள்ளையர்கள் அசோக் என்பவரைக் கத்தியால் வெட்டி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் வந்துள்ளதாகவும், வெள்ளவேடு பகுதியில் இரண்டு பேரை தாக்கியதும் தெரியவந்துள்ளது.
ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையர்கள் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவகாசி சிறுமி கொலை வழக்கில் அசாம் இளைஞர் கைது!